திங்கள், 25 ஜூன், 2018
மீனவர்களின் அம்பா பாட்டு தொடர் 03
இந்த வகையான அம்பா பாடல், படகு வலிக்கும் போது மீனவர்களினால் களைப்பு தெரியாமல் இருப்பதற்கும், விரைவாக படகை செலுத்துவதற்கும் பாடப்படுகின்றது.
மாயவலை (அம்பா)
ஏலம்மா ஏலேலோ
ஏலோ ஐயா ஏலேலோ
ஏலேலம்மா ஏலேலோ
ஏலேலையா ஏலேல் ஓ
மேலவல கீழவல
மாயவல மடவல
அத்தரிப் பாச்சான்
ஆளுக்கொண்ட மடக்கு
சுறுக்கன் சூசை காடேறி
தீயில் சுட்ட தேக்குமரம்
மேலவல கீழவல
மாயவல மடவல
அத்தரிப் பாச்சான்
ஆளுக்கொண்ட மடக்கு
செருக்கன் தீயோ மலையேறி
தோளில் சுமந்த கொம்பேரா
கரவல ஓலவல
மாயவல மடக்கு
மடவல கிழவல
கீழ என்ன கிடக்கு
கணக்கன் கயித்தான் கணக்காக
கயிறு பிடிச்ச கடலோடி
வழிவல சூடவல
வழியில கிடக்கு
வழியில போறவள
முலையென்ன விடுப்பு.
இந்தபாடலை பதிவு செய்த மெலிஞ்சிமுனை தமயந்திக்கு நன்றிகள் உரித்தாகுக! அன்புடன் பேசாலைதாஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாராய் என் தோழி வாராயோ! பேசாலைதாஸ் நான் அறிவு தெரிந்த காலம் தொட்டு, கல்யாண வீடுகளில் ஒலித்த இந்த பாடல் இன்னும் மனதை விட்டு அகலவே இல்லை,...
-
"வண்ணத்தமிழ் பெண் ஒருத்தி என் எதிரில் வந்தாள்" பேசாலைதாஸ் பாவை விளக்கு என்ற திரைப்படத்தில் ஜெயராமன் பாடிய பாடல்தான் வண்ணத்தமி...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக