11 ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

பாட்டும் பதமும் 11  
ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் பேசாலைதாஸ்
அன்பர்களே இலக்கியத்திலே கவிதை எழுதும் போது அல்லது ஒரு கவிதையை படிக்கும் பொது, உவமை உவமானம், உயர்வு நவிற்சி, அன்மொழித்தொகை, தொக்கி நிற்கும் கருத்துக்கள், தொடை அந்தாதி, சந்தம் இப்படி ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. இலக்கிய திறனாய்வு செய்பவர்களுக்கு இது எளிதாக புரியும்.
திரைப்பாடல்களில் அந்தாதித் தொடை என்பது மிக அரிதான விஷயமே. அதுவும், ஒரே படத்தில் இரண்டு பாடல்களை அந்தாதியில் அமைக்க ஓர் அசுரத் திறமை வேண்டும். அது நமது கவியரசருக்கு வாய்த்திருந்தது. ‘மூன்று முடிச்சு” படத்தில் வரும் பாடல்களில்,

‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் -

நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்-

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்-

கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்’என்றும்..

‘ஆடி வெள்ளி தேடி உன்னை நானலைந்த நேரம் -

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்-

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்-

ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்’ என்றும் அந்தாதித் தொடைகள் அணிவகுத்து நம்மை அசர வைக்கும். ‘வசந்தகால நதிகளிலே’ பாடலில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், கமல், தேவி இருவரும் காதலில் மயங்கிக் கிறங்கும் பாடலாதலால், 13 இடங்களில் ‘கள்’ என்ற வார்த்தையைப் பிரயோகித்திருப்பான் அப்பெருங்கவி. அன்பர்களே இப்போது பாடலை கவனமாக கேளுங்கள் என்னோடு நீங்கள் உடன்படுவீர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

   வாராய் என் தோழி வாராயோ!  பேசாலைதாஸ் நான் அறிவு தெரிந்த காலம் தொட்டு, கல்யாண வீடுகளில் ஒலித்த இந்த பாடல் இன்னும் மனதை விட்டு அகலவே இல்லை,...