அசலும் நகலும்
ஓ ஓ ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே,
இசை என்ற இன்ப வெள்ளத்தில், நீராடும் நெஞ்சங்களுக்கு, வெவ்வேறு மொழி இசை சோலைக்குள் போராடி, வெவ்வேறு காலகட்டத்தில், திரை இசையில் மலர்ந்த மெட்டுக்களை, சுரம் பிரித்து, அசல் நகல் என்று தரம் பிரித்து, இந்த இசைக்கோலத்தை தொடராக, அன்புத்தோழி திருமதி வெரோனா ஷர்மிலி அவர்கள், தேன் தமிழ் ஓசை இணைய வானொலியிலும், தேன் தமிழ் தடாகம் என்ற இணைய தொலைக்காட்சியிலும், தொடராக வெளியிட முன்வந்துள்ளார்கள், உண்மையில் இது, ஜவ்வாது மேடையிட்டு, சக்கரையில் பந்தலிட்டு, செம்மாதுளை பிளந்து தரும் அன்பு படையல் , இசை பிரியர்களே பார்த்தும் கேட்டும் பரவசமடையுங்கள்.
தமிழ் இசை, தெய்வங்களினாலும், பொய்யாமொழிப்புலவர்களாலும், இசைஞ்சானிகளாலும் வளர்க்கப்பட்டது உண்மை என்றாலும், தமிழ் திரை இசையில், காலம் காலமாக, வட இந்திய சாஸ்திர சங்கீத திண்டலும், தொடுகையும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது.
சினிமாவின் வருகை, இந்தியில் இருந்து இழுத்துவரப்பட்டதினால், சினிமாத்தொழில் நுட்பங்கள், சினிமா இசை நுட்பங்கள், அப்படிய தமிழுக்கும் மருவியது வியப்பில்லை. ஹிந்தி இசை பாடல்கள் அப்படியே தமிழுக்கு மொழிபெயர்ந்தது போலவே, ஹிந்துஸ்தானி மெட்டில் தமிழ் வார்த்தைகளைக் கொண்டு பாடல்கள் அமைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே வந்தது.. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ!
1951 இல் இந்தியில் , திலீப் குமார்,நர்கிஸ்தாத், அசோக் குமார் நடிப்பில் வெளிவந்த தீதார் படத்தில், Bachpan Ke Din Bhula Na பாச்பன் கி டின் புகுலஹா நா என்ற முகமத் ராபி பாடிய பாடல் தான், தமிழில், ஓ ஓ ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே, சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே என்ற பாடலாக மலர்ந்தது,
இந்த பாடல் இரண்டு கட்டங்களாக காட்சி படுத்தப்பட்டிருக்கும், பால்ய பருவத்தில் பாடுவதும், பின்னர் வளர்ந்து பெரியவர்களாக மாறியபோது பாடுவதாக இது அமைக்கப்பட்டிருக்கும். இந்த கட்சி இடம் பெற்ற படம், 1963 இல் வெளிவந்த நீங்காத நினைவு நிற படமாகும். சிறுவர்களாக இருந்த பொழுது, பி.சுசீலா. எல் ஆர் ஈஸ்வரி குரலில் இரு குழந்தைகள் காட்சியில் தோன்றும் பாடலைப் பார்த்தும், கேட்டும்...நம் பால்ய வயது நினைவுகளை பலர் அசைப்போட்டு இருப்போம். எஸ்.எஸ்.ஆர், புஷ்பலதா, கல்யாண்குமார் இவர்களின் அழகான நடிப்பில் பெரியவர்கள் ஆனதும் பாடும் அதே பாடல் தான் வாலியின் வரிகளில்..கே.வி மகாதேவன் இசையில்,பாடகர் திலகம் TMS பாடுவார்..பாடலின் முடிவில் ஹை பிட்ச்சில் பின்னி எடுப்பார்.. இதோ பாடலை கேளுங்கள் தொகுத்தளிப்பவர் உங்கள் அன்பின் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக