"அன்றொரு நாள், அதே நிலவில், அவள் இருந்தாள் என் அருகில்,,," பேசாலைதாஸ்
இதற்கு மாறாக வெண்ணிலாவில் தன் துன்பம் துடைக்கும் ஒரு புறநாணூற்றுப்பாரிபாடல் உண்டு. அதனை பாரிமக ளின் பாடல் என்பார்கள், முல்லைக்கு தேர் ஈர்ந்தானே அந்த பாரியின் வழிவந்த பாரியின் புத்திரிகளான அங்கவை, சங்கவை என்ற இரு சகோதரியின் பாடல் இது! ( ரஜனி நடித்த சிவாஜி படத்தில் வரும் அங்கவை, சங்கவை அந்த நகைச்சுவை அல்ல)
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.
(புறநானூறு:112)
அற்றைத்திங்கள் (திங்கள் என்பது மாதம்) அவ்வெண்ணிலவில், எம் தந்தையோடு, எதிரிகள் வெற்றி கொள்ளமுடியாத மலைகளோ நாம் இருந்தோம், இற்றைத்திங்கள், இவ்வெண்ணிலவில் எதிரி மன்னர்களினால், எங்கள் மலைகளை இழந்தோம், தந்தையும் இழந்தோம்! எதிரிகளால் தன்னுடைய பறம்பு மலை சூறையாடப்பட்டு, தந்தை வீழ்த்தப்பட்டு, யாருமற்று அனாதைகளாக ஆக்கப்பட்ட மகள்களின் அவலக் குரலை, அவர்களின் கண்ணீரைத் தாங்கி நிற்கிறது அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் பாடல்.
சங்க கால காதல் சங்கதிகளை, பாரி காலத்து அற்றை வெண்ணிலவிலே என்ற அந்த வரிகளை என் கவி ஆசான் கவிஞர் கண்ணதாசன் கையாண்டு, சங்ககால பரம்பு மலையின் காதல் உணர்வுகளை, அன்றொரு நாள், அதே நிலவில், அவள் இருந்தாள் என் அருகில்,,,, என்று பாடுவதன் மூலம், சங்ககால இலக்கியத்தை இலகுவாக சினிமா பாடலுக்குள் புகுத்தும் விதை தெரிந்தவன் கவிஞன் கண்ணதாசன், இனி பாடலை கேட்டு நீங்களும் நிலாவை காதலியுங்கள்! அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக