செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்,,,,

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் பேசாலைதாஸ்


உடல் ஊனம் பற்றி கவிஞர் கண்ணதாசன் நிறைய பாடல்கள் எழுதியுள் ளார். அதில் மிகச்சிறப்பான பாடல் பாகப்பிரிவினை என்ற படத்திற்காக எழுதி தங் கத்திலே ஒரு குறை இருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ? உங்கள் அங் கத்திலே குறைவிருந்தாலும், அன்பு குறைவதுண்டோ என்று மனைவி கேட் கும் பாடல் அது, அந்த பாடலை பற்றி நான் இங்கு சிலாகிக்க வரவில்லை, ஆனால் அதே சூழ்னிலையில் எல்லாம் உனக்காக என்ற படத் தில், கவிஞர் எழுதிய பாட லின் கருத்துக்களை அன்பு தம்பதியினர் கேட்டு இனபம் கொள்ளவேண்டும் என்பதற்காக இதை பதிவு செய்கின்றேன்.

விபத்தில் கால்களை இழந்த மனைவிக்கு கணவன் ஆறுதல் சொல்லும் வித மாக கவியரசர் எழுதிய இந்த பாடல் ஆழமான பொருள் நிறைந்த அற் புதம்! அவனது ஒவ்வொரு வரிக்கும் பதிலாக தான் நடக்க முடியாதவள் என மனைவி விரக்தியில் கூற, அந்த தாழ்வு மனப்பான்மையை தகர்த் திடும் விதமாய், தன்ன ம்பிக்கை அளிக்கும் உறுதியாய்  கணவனின் வார்த்தைகள்...

கணவன்: மலரும் கொடியும் பெண் என்பார்! மதியும் நதியும் பெண் என்பார்!

மனைவி: மலரும் கொடியும் நடப்பதில்லை!

கண: அவை மணம் தர என்றும் மறப்பதில்லை!

க: கோவிலில் விளங்கும் சிலை போலே என் குலத்தில் விளங்கும் திருமகளே!"

ம: கோவில் சிலைகள் நடப்பதில்லை!

க: அதைக் குறையெனக் கலைகள் வெறுப்பதில்லை!

க: தேன் மணம் கமழும் பூ மகளே என் சிந்தையில் மலர்ந்த தாமரையே!"

ம: தாமரை மலரரும் நடப்பதில்லை!"

க: "அதை தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை!"

"நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்துவிட்டோம்

நினைவினில் குறைகள் வருவதில்லை!

கண்களில் ஒன்றாய் கலந்துவிட்டோம்

இனி காட்சிகள் வேறாய் தெரிவதில்லை!"

முத்திரை பதிப்பதாய் அமையும் இறுதி வரிகள்!

 கவியரசரின் கவிவரிகள் மிக சிறப்பு! 

"எல்லாம் உனக்காக" என்ற திரைப்படத்தில் K V மகாதேவன் அவர்களின் இசையில், டி. எம். எஸ். சுசீலா அம்மா குரல்களில் மிக அருமையான பாடல் இதோ உங்களுக்கா! பேசாலைதாஸ்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

   வாராய் என் தோழி வாராயோ!  பேசாலைதாஸ் நான் அறிவு தெரிந்த காலம் தொட்டு, கல்யாண வீடுகளில் ஒலித்த இந்த பாடல் இன்னும் மனதை விட்டு அகலவே இல்லை,...